சேலத்தில் தப்பிய கைதி: வழக்கறிஞருக்குத் தொடர்பா?

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மருத்துவமனையிலிருந்து ஒரு கைதி தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக அந்நகரைச் சேர்ந்த ஒருவழக்கறிஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையைச் சேர்ந்த பிளாலுதீன் என்ற சித்திக், கடந்தஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தன்னுடைய கூட்டாளிகள் 6 பேர் உதவியுடன் தப்பிச் சென்று விட்டான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு உள்பட 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சித்திக்கின் கூட்டாளிகள் தவறவிட்டுச் சென்ற செல்போன் மூலம் பல தகவல்கள் போலீசாருக்குக்கிடைத்துள்ளன.

சம்பவம் நடப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன் அந்த செல்போன் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞருடன்சித்திக்கின் கூட்டாளிகள் பேசியுள்ளனர். இதையடுத்து அந்த வழக்கறிஞரிடம் போலீசார் தீவிரமாக விசாரணைநடத்தி வருகின்றனர்.

இதைக் கேள்விப்பட்ட 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் விசாரணை நடந்து வரும் போலீஸ் நிலையத்தின்முன்பாகக் கூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

சித்திக்கின் கூட்டாளிகள் அந்த செல்போன் மூலம் பல வெளிநாடுகளிலும் தொடர்பு வைத்திருந்த விஷயமும்தற்போது தெரிய வந்துள்ளது. எனவே இவர்கள் சர்வதேசப் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள்என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே தப்பிச் சென்ற சித்திக்கையும் அவனுடைய கூட்டாளிகளையும் தேடி தமிழகம் முழுவதும் 7 தனிப்போலீஸ் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக சேலம் மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+