காவிரி நீர் பங்கீடு: மறுபரிசீலனை செய்ய கண்காணிப்புக் குழு முடிவு
டெல்லி:
காவிரி நீர் பங்கீடு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
காவிரி கண்காணிப்புக் குழுவின் 11வது கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில்டெல்லியில் நடந்தது.
கர்நாடக அணைகள் மற்றும் மேட்டூர் அணை ஆகியவற்றில் உள்ள நீரின் அளவு மற்றும் இந்த அணைகளுக்குவந்து சேரும் நீரின் அளவு ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
இந்த அணைகளில் நீர் குறைவாகவுள்ள காலங்களில் அதைப் பகிர்ந்து கொள்வது குறித்து தமிழக, கர்நாடக அரசுஅதிகாரிகள் இக்கூட்டத்தில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதையடுத்து நீர் குறைவான நேரங்களில் அதைப் பகிர்ந்து கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றுகண்காணிப்புக் குழு முடிவு செய்தது.
இதுகுறித்த வழிமுறைகள் அடுத்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications