அயோத்தி விவகாரம்: வி.எச்.பி. மீது கருணாநிதி பாய்ச்சல்
திருச்சி:
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பினால், நாட்டில்குழப்பம் நிலவும் அபாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரத்திற்காக போகும் கருணாநிதி, வரும் வழியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருச்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருப்பது நாட்டில் பலபதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்று அச்சமாக உள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தான் நிலத்தை கொடுக்க முடியும் என்று பிரதமர் வாஜ்பாய் உறுதியாக கூறியிருப்பதுபாராட்டத்தக்கது. வாஜ்பாயும், ஜனா.கிருஷ்ணமூர்த்தியும் அயோத்தி விவகாரத்தில் தங்கள் நிலையில் எந்தமாற்றமும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த நெருக்குதலையும் திமுக ஏற்படுத்தாது.
பாஜக வகுப்பு வாதங்களைத் தூண்டிவிடுவதால் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருக்கும் திமுக, மதிமுக, பாமககட்சிகள் அந்த கூட்டணியிலிருந்து விலகி வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருப்பதுஅவர்களுடைய விருப்பம். நாங்கள் பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம்.
காவிரி பிரச்சனையில் அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறது. இது குறித்துநடவடிக்கைகளை அதிமுக அரசு துரிதப்படுத்த வேண்டும்.
அச்சிரப்பாக்கம் தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் போட்டியிடுவார் என்றுகருணாநிதி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications