சத்தியமங்கலம் அருகே பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே பிள்ளையாருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாலும், மற்ற சிலைகள்உடைக்கப்பட்டதாலும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே சதுமுகையில் அரசமர விநாயகர், வரசித்தி விநாயகர் மற்றும் பத்ரகாளியம்மன்கோவில்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள மக்கள் கோவில்களில் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் விநாயகர் கோவிலை சுத்தம் செய்து கோலமிட நஞ்சம்மாள் என்ற பணிப்பெண் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம் போல் சென்றார். அப்போது 2 விநாயகர் சிலைகளுக்கும்செருப்பு மாலை போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்த முனியப்பன் சிலை அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அதோடுஅங்கிருந்த விநாயகர் சிலை பிடுங்கி எறியப்பட்டிருந்தது. இதனால் மேலும் அதிர்ந்து போன நஞ்சம்மாள், ஊர்கவுண்டர் ராஜகோபாலிடம் கூறினார்.
இச்சம்பவம் பற்றி ராஜகோபால் போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம்நிலவியது. 500க்கும் மேற்பட்ட மக்கள் கோவில் முன் திரண்டனர். இதில் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசைக் கண்டதும் இந்த சம்பவம்தொடர்பான குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
இந்தப் பகுதியில் கலவரம் ஏற்படாமல் தடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசார் உடனடியாகவரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரியார் தி.கவினருக்குத் தொடர்பா?
இச்சம்பவத்தின் பின்னணியில் கொளத்தூர் மணி தலைமையில், இயங்கும் பெரியார் திராவிடர் கழகத்திற்குதொடர்பு இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 1998ம் ஆண்டு இதே நாள் தான் கோவையில் குண்டு வெடிப்பு சதியில் சிக்கி 60க்கும் மேற்பட்டவர்கள்இறந்தனர். இந்த நாளை இந்து அமைப்புகள் நினைவு நாளாக அனுஷ்டிக்கின்றனர்.
இந்த நாளை இந்து அமைப்பினர் நினைவு நாளாக அனுஷ்டிப்பதற்கு எதிராக, யாரோ சிலர் விஷமத்தனத்தில்இறங்கியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications