ஜெவுக்கு தோல்வி பயம்: இல.கணேசன்
சென்னை:
ஜெயலலிதாவுக்கு தான் எங்கு தோல்வியடைந்து விடுவோமோ என்ற தோல்வி பயம் வந்து விட்டது என்று தமிழகபாஜக பொது செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து இல.கணேசன் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன்பு வரை ஜெயலலிதா, தான் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற இறுமாப்பில்இருந்தார். ஆனால் இப்போது தேர்தல் ஜூரத்தில் அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
அதனால் தான் அவர் அரசியல் ரீதியாக பிரச்சாரம் செய்யாமல், தேர்தல் விதிமுறைகளை மீறி பல நலத்திட்டங்களைஅறிவித்து வாக்கு சேகரிக்கிறார். நலத் திட்டங்களைச் சொல்ல இவர் என்ன அமைச்சரா?. மேலும் அமைச்சர்கள்எல்லோரையும் ஆண்டிப்பட்டிக்கு வரச் சொல்லி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட வாஜ்பாய், அயோத்தி விவகாரத்திலும் நிச்சயம் நல்ல தீர்வுகொண்டு வருவார் என்று இல.கணேசன் கூறினார்.












Click it and Unblock the Notifications