அயோத்தி சமாதான முயற்சிகள் தோற்றுவிட்டன- வாஜ்பாய்
லக்னெள:
அயோத்தி பிரச்சனையைத் தீர்க்க நான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன எனவும் நீதிமன்றதீர்ப்பு மூலம் மட்டுமே இனிமேல் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் எனவும் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
லக்னெளவில் நிருபர்களிடம் வாஜ்பாய் கூறுகையில்,
அயோத்தி விவகாரம் குறித்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற பெஞ்சில் மேலும் 2 நீதிபதிகள்நியமிக்கப்படவுள்ளனர். இந்த பெஞ்ச் மூலம் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.
இந்தப் பிரச்சனையில் இரு தரப்பினருமே விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இரு தரப்பினருமே பிடிவாதம்பிடிக்கின்றனர். இதனால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது சாத்தியமில்லை.
அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் கேட்டுள்ள பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தை அவர்களிடம் ஒப்படைப்பதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவெடுக்க எந்த கெடுவும் எனக்கு விதிக்கப்படவில்லைஎன்றார்.
வி.எச்.பி. அதிர்ச்சி:
பிரதமரின் இந்தக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ளது.
அயோத்தியில் மார்ச் 15ம் தேதி கோவில் கட்டும் பணியைத் தொடங்குவோம் என அறிவித்துள்ளது வி.எச்.பி.
நீதிமன்றம் மூலம் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என வாஜ்பாய் கூறியுள்ளது குறித்து வி.எச்.பியின்தலைவர் ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர் கூறுகையில்,
கடந்த கும்பமேளாவின்போது கோவில் கட்டுவதற்கான நாளை நாங்கள் அறிவித்தோம். இதில் நாங்கள் பிடிவாதம்பிடிப்பதாக பிரதமர் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.
பாபர் மசூதி கமிட்டி தான் பிடிவாதம பிடிக்கிறது. அவர்கள் தான் பேச்சுவார்த்தைக்கே முன் வராமல் பிடிவாதமாகஉள்ளனர்.
நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் வி.எச்.பிக்கு சம்பந்தமேயில்லை. எங்களுடைய நிலம் (வி.எச்.பி. கேட்கும்நிலம்) பிரச்சனைக்கு உட்பட்டதல்ல. சிறைக்குப் போகவும் தயார். ஆனால், கோவில் கட்டியே தீருவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications