ஜெ.க்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுத்த மாணவனுக்கு ஜாமீன்
நாகர்கோவில்:
ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நாகர்கோவில் பள்ளி மாணவன் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், கல்வி அமைச்சர் தம்பித்துரைக்கும் சமீபத்தில் இ-மெயில் மூலம்கொலை மிரட்டல் விடப்பட்டது. போலீஸ் விசாரணையில் நாகர்கோவிலில் இருந்து இந்த மெயில் அனுப்பப்பட்டதுதெரிய வந்தது.
நாகர்கோவில் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த பிரபல டாக்டர் கணேசன் என்பவரின் மகன் பாலுஎன்பவர் தான் மிரட்டல் இ-மெயில்களை அனுப்பியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு குறித்து சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையினால்தான் அப்படி அனுப்பியதாக பாலுகூறினார். இதையடுத்து பாலு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமை திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதிமுத்துக்கிருஷ்ணன் பாலுவை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார்.
இதன்படி பாலு தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் நாகர்கோவில் குற்றப்பிரிவு எஸ்.பி. முன்புஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications