பிஜி: ஆட்சியை கைப்பற்றிய ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு ஆயுள்
சுவா:
கடந்த மே 2000ல் பிஜி நாட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி தலைமையிலானஆட்சியைக் கவிழ்த்த ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு இன்று (திங்கள்கிழமை) அந்நாட்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனையை அந்நாட்டு அதிபர் ஜோசபோ இலோய்லோ ஆயுள் தண்டனையாகக் குறைக்க உத்தரவிட்டார்.
தெற்கு பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு பிஜி. இந்திய வம்சாவழியினர் பெருமளவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கும் பிஜியைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கும் இடையே காலம்காலமாக பிரச்சினை இருந்துவருகிறது.
கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி பிரதமர் மகேந்திர செளத்ரியின் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான பிஜிஇனத்தவர்கள் கூடி, அவருக்கு எதிராக கோஷம் இட்டனர்.
புரட்சிக்காரர்களின் தலைவரான ஜார்ஜ் ஸ்பைட், பிஜி இனத்தவர் ஒவ்வொருவரின் சார்பிலும் நான் இந்த நாட்டின்ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். விரைவில் அரசியல் சட்டம் திருத்தப்படும். இடைக்கால அரசும்நிறுவப்படும் என்றார்.
அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் சாம் ஸ்பைட்டின் மகனான ஜார்ஜ் ஸ்பைட், மொத்தம் 56 நாட்கள்செளத்ரியையும் அவருடைய அமைச்சர்களையும் வீட்டுக் காவலில் வைத்திருந்தார்.
இதையடுத்து பிஜி ராணுவத்தினர் பிரதமர் மாளிகையையும் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு,செளத்ரியையும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களையும் மீட்டனர்.
பிரதமரையும் அமைச்சர்களையும் வீட்டுக் காவலில் வைத்து ஆட்சியைத் தம் கையில் எடுத்துக் கொண்டதுதொடர்பாக ஜார்ஜ் ஸ்பைட் உள்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜார்ஜ்ஸ்பைட்டுக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் ஸ்காட், அவரைச் சாகும்வரை தூக்கிலிட வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.
தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜார்ஜ் ஸ்பைட்டின் மனைவி கதறி அழுதார். ஆனால்அருகிலிருந்த ஜார்ஜ் ஸ்பைட்டோ எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார்.
தன்னுடைய ஆதரவாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜார்ஜ் ஸ்பைட், பின்னர்உடனடியாக கோர்ட்டிலிருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே ஜார்ஜ் ஸ்பைட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக்குறைக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞரான ரோன் கேனான் அந்நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கைமனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்உத்தரவில் ஜனாதிபதி ஜோசபோ இலோய்லோ கையெழுத்திட்டுள்ளதாக அட்டார்னி ஜெனரல் கோரினியாசி பாலேஇன்று பிற்பகல் கூறினார்.
பிஜி நாட்டைப் பொறுத்தவரை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனைபெற்றுவிட்டு வெளியே வந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications