கோவையில் ரூ.16 கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் கைது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் டேட்டா பிராசஸிங் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வேலை தருவதாக கூறி ரூ.16 கோடி மோசடிசெய்த நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரில் ஏ.டி.எம். எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவி டேட்டாபிராசஸிங் வேலை தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் பெற்றுள்ளார் அருண் சின்னசாமி என்பவர்.
போலீஸ் இந்த போலி நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடித்தது. ஆனால் சின்னசாமியோஉடனடியாகத் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து சின்னசாமியின் பெயரில் பாங்கில் இருந்த ரூ.60 லட்சத்தை போலீசார் முடக்கினர். இவர் ரூ.16 கோடிவரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
தலைமைறைவான சின்னசாமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு காங்கேயத்தில் உள்ள தன் மாமனார் வீட்டிலுள்ளதன் குழந்தைகளைப் பார்க்க சென்றபோது, அவரைப் போலீசார் கைது செய்தனர்.
சின்னசாமியிடமிருந்து 2 கார்கள், 2,500 பிளாப்பிகள், 180 சிடிக்கள், அமெரிக்க டிராவலர்ஸ் செக், நைஜீரீயாமற்றும் கென்ய நாட்டு கரன்சிகள், ரூ.2 லட்சத்துக்கான டெபாசிட் பத்திரம் மற்றும் ரூ.2.5 லட்சத்திற்கான டி.டி.ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் மோசடி செய்தபணத்தில் சின்னசாமியும், பெங்களூரில் உள்ள கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு சென்னையில் உள்ளகம்பெனியின் ஷேர்களை வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரியான ஆதாரம் கிடைத்தவுடன் பெங்களூரில் உள்ள கோபாலகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்வார்கள்என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications