மார்ச்சில் புலிகளுடன் பேசுவோம்: ரணில்
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் எப்படியும் தொடங்கிவிடும் என்று இலங்கைபிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நார்வே தூதுக் குழுவினர் மேற்கொண்டுள்ளபேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் விக்கிரமசிங்கே அப்போதைக்கு அப்போதுதெரிவித்துக் கொண்டே உள்ளார்.
அந்த வகையில் பேச்சுவார்த்தை முயற்சிகளை சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் மற்றும் முன்னாள் பிரதமர் லீக்வான் இயூ ஆகியோரிடம் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையை எப்படியும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கி விடுவோம்என்று விக்கிரமசிங்கே அப்போது கூறினார்.
இலங்கையில் சிங்கப்பூர் பல்வேறு முதலீடுகளைச் செய்யவேண்டும் என்றும் விக்கிரமசிங்கே சிங்கப்பூர்பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இலங்கையில் அமைதி திரும்பினால் நிச்சயம் முதலீடு செய்வோம் என்று சோக்டோங்கும் உறுதியளித்தார்.
இந்நிலையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானால் பேச்சுவார்த்தை இன்னும் விரைவாகத்தொடங்கும் என்று நார்வே குழுவினர் நம்புவதால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் அக்குழுவினர்மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக நார்வே குழுவினர் நாளை லண்டன் சென்று அங்குள்ள விடுதலைப்புலிகளின் அரசியல்ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தைச் சந்திக்கவுள்ளனர்.
இந்தியாவிலேயே பேச்சு நடத்த புலிகள் விருப்பம்:
இதற்கிடையே இந்தியாவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விடுதலைப்புலிகள் மீண்டும்கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள சென்னை அல்லது பெங்களூரில் வைத்துதான் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்என்று "தமிழ்-நெட்" என்ற வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில் பாலசிங்கம் கூறியுள்ளார்.
வரும் மார்ச் 16ம் தேதி மாலத்தீவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று இலங்கை அரசு கூறியதாக வந்தசெய்தி தவறானது என்றும் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications