மணலி போலீஸ் காலனியில் பணம், நகை கொள்ளை
சென்னை:
மணலியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் புகுந்த கும்பல் ஒன்று 4 காவலர்கள் வீட்டில் கொள்ளையடித்து தப்பிச்சென்றது.
சென்னை அருகே உள்ள மணலியில் புதிதாகக் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில்சுமார் 150 காவலர்கள் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த குடியிருப்பில் உள்ள சில காவலர்கள் பரங்கிமலைக்கு துப்பாக்கிச் சுடும்பயிற்சிக்கு சென்றனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் நேற்று அந்த குடியிருப்பில்புகுந்துள்ளனர்.
அந்தக் குடியிருப்பில் இருந்த 4 வீடுகளில் புகுந்து பட்டுப்புடவை, தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றைஅந்தக் கொள்ளையர்கள் திருடிக் கொண்டு ஓடிவிட்டனர்.
அக்கம்பக்கம் இருப்பவர்கள் சத்தம் கேட்டால் முழித்துக் கொள்வர் என்று எண்ணி அவர்கள் வீட்டின் கதவைவெளிப்புறமாக தாளிட்டு கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் ஒருவர். இது குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் குடியிருப்புப் பகுதியிலேயே இந்தக் கொள்ளை நடந்திருப்பது மணலி பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications