சொந்தக் காலில் நிற்பதுதான் உண்மையான சுதந்திரம்: வைரமுத்து
திருப்பூர்:
தமிழன் சொந்தக் காலில் நிற்கும் நிலைதான் உண்மையான சுதந்திரம் ஆகும். இன்னொருவர் தோளில் ஏறிசெல்லும் வாழ்க்கையை தூக்கி எறிய வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறினார்.
வைரமுத்து எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்" திறனாய்வுத் திருவிழா கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
70வயது என்பது முதுமையின் தொடக்கம் அல்ல. இளமையின் துணிவு. இவர்கள் பாராட்டி பேசுவது, இந்தபடைப்புக்கான அங்கீகாரம் அல்ல. அடுத்த படைப்புக்கான உற்சாகம் என்று நான் நினைக்கிறேன்.
17 வயதில் நகம் சிதைந்து ரத்தம் சொட்டச் சொட்ட வயல் வெளிகளில் திரிந்த போது இது எனக்குரிய வாழ்க்கைஅல்ல என்று நினைத்தேன். அன்று பட்ட ரணங்கள் இப்போது எனக்கு ஆபரணமாக உள்ளது.
18 நூற்றாண்டுகள் புதைக்கப்பட்டு கிடந்த திருக்குறள் வெளி வந்து உள்ளது. மண்ணுக்குத் தேவையானதும்,உண்மையானதும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அது வெளி வந்தே தீரும்.
தமிழர் கலாச்சாரத்தில் காதல் கடினமானது ஆகும். இங்கு நடை, உடை மாற்றங்கள் கண்காணிக்கப்படும்.கட்டுப்பாடு தான் காதலை ருசியாக்குகிறது. மறைக்கும் வரை தான் அழகு. கிராமத்து வாழ்க்கையில் இன்னும்துன்பம் தீரவில்லை.
தமிழன் சொந்தக் காலில் நிற்கும் நிலைதான் உண்மையான சுதந்திரம் ஆகும். இன்னொருவர் தோளில் ஏறிசெல்லும் வாழ்க்கையை தூக்கி எறிய வேண்டும்.
மனிதனுக்கு கொடை உள்ளம் வர வேண்டும் என்றால், சாவு வர வேண்டும். குடும்பத்திற்கு கடமையையும்,தொழிலுக்கு உண்மையாகவும், சமுதாயத்திற்கு நல்லவர்களாகவும் இருங்கள்.
இறந்த பிறகு உங்களைப் பற்றி உங்களது நண்பர்கள், பங்குதாரர்கள், இந்த சமுதாயத்தினர் என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறு வாழுங்கள் என்று வைரமுத்து கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications