24ம் தேதி ஜெ. பிறந்த நாள்: ஆண்டிப்பட்டி பரிசாகுமா?
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 54-வது பிறந்த நாளையொட்டி 2 நாட்களுக்கு தமிழகம்முழுவதிலும் ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்க அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.
வருகிற 24ம் தேதி ஜெயலலிதா தனது 54வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அன்றுதான் ஆண்டிப்பட்டிதேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிப்பட்டியில் எப்படியும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்று நம்பும் அதிமுகவினர், அத்தொகுதியையேஅவருக்குப் பிறந்தநாள் பரிசாக அவர்கள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளிலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தமிழகம் எங்கும் சிறப்பாககொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளது.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இலவச மருத்துவ முகாம்கள் ஆகியவற்றிற்குஅதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுதவிர ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள், ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள்கள், சலவைத்தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டிகள், மூக்குக் கண்ணாடிகள், ஊன்றுகோல்கள், இலவச வேட்டி, சேலைஆகியவை வழங்கப்படவுள்ளது.
இதுதவிர ரத்ததான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதிலும்பொதுக்கூட்டங்களுக்கும் அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் அமைச்சர்கள் பலர் இந்தப்பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications