பாதுகாப்பு கருதி புது வீட்டில் குடியேறிய அத்வானி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கூடுதல் பாதுகாப்பு வசதி கருதி, புதிய வீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி குடியேறினார்.

நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதை அடுத்து அனைத்து முக்கியத் தலைவர்கள் வீட்டுக்கும் பலத்தபாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில் அத்வானியின் பெயர் முதல்இடத்தில் உள்ளது.

அவரைக் கொலை செய்ய கடத்தல் மன்னம் தாவூத் இப்ராகிம், அவனுடைய கூட்டாளி சோட்டா ஷகில் ஆகியோர்திட்டமிட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அத்வானி புதிய வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று புலனாய்வுத்துறையினர் வற்புறுத்தி வந்தனர்.

இதனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த டெல்லி பந்த்ரா பூங்கா ரோட்டில் உள்ள வீட்டிலிருந்து,பிருத்விராஜ் சாலையில் உள்ள வீட்டுக்கு அத்வானி செவ்வாய்க்கிழமை குடியேறினார்.

புதிய வீடு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து உள்ளே வருபவர்களைஅறிய கண்காணிப்பு டெலிவிஷன்களும் உள்ளன.

நாடாளுமன்றத்திலும் கூடுதல் பாதுகாப்பு:

இதற்கிடையே தீவிராவதிகள் மீண்டும் தாக்கக்கூடும் என்பதால் நாடாளுமன்றத்திலும் கூடுதல் பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் உட்பட முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்கக் கூடும் என்பதால் நாடாளுமன்றத்தின்பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதன் அடிப்படையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுஉள்ள தலைவர்கள், இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ள தலைவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு மாற்றிஅமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் முன்னாள் எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி நிருபர்களின்வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.

மேலும் நாடாளுமன்றத்தின் முக்கிய இடங்களில் எந்திர துப்பாக்கியுடன் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். இதுபோல் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கருதி பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடாளுமன்றம் கூடவிருக்கும் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றுநாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+