நாளை காலை 8 மணிக்கு தேர்தல் ஆரம்பம்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கும் தேர்தல் மாலை 5 மணிக்குமுடிவடைகிறது.
மொத்தம் 216 வாக்குச் சாவடிகளில் சுமார் 2,10,000 பேர் தங்கள் வாக்குளைப் பதிவு செய்யவுள்ளனர்.
தேர்தலை சுமூகமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத்தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளுக்கு மின் வாக்குப்பதிவு எந்திரங்கள், அடையாள மை உள்ளிட்ட பொருள்களைக்கொண்டுபோய் சேர்க்கும் பணி இன்று இரவுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறிய சாரங்கி, மொத்தம் 900 பேர்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க முடியாது என்றும் சாரங்கிகூறியுனார்.
வாக்குப்பதிவின்போது வன்முறையைத் தூண்டிவிட சதி நடப்பதாக திமுகவினரும் அதிமுகவினரும்ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் வரலாறு காணாத அளவுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
2,000 மத்திய ரிசர்வ் படையினர் உள்பட 5,000க்கும் மேற்பட்ட போலீசார் ஆண்டிப்பட்டி தொகுதியில்குவிக்கப்பட்டுள்ளனர். தொகுதி முழுவதும் ரோந்துப் பணியை நேற்றே அவர்கள் தொடங்கிவிட்டனர்.
தேவைப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விரோதிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறுதேனி மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்ததையடுத்து, ஒலிபெருக்கிகளெல்லாம் கழற்றப்பட்டுஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் பெரும் அமைதி நிலவுகிறது.
ஆனாலும் வாக்காளர் அடையாளச் சீட்டுகளைக் கொடுக்கும் சாக்கில் அதிமுக, திமுக, மதிமுக மற்றும் புதியதமிழகம் கட்சிகளின் தொண்டர்கள் கடைசி நேர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications