கடுமையாக உயர்கிறது ரயில் கட்டணம்
டெல்லி:
வரும் 26ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்படும்என்று தெரிகிறது.
நாடாளுமன்றம் வரும் 25ம் தேதி கூடுகிறது. 26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28ம் தேதி மத்திய பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
ரயில்வே பட்ஜெட்டைப் பொறுத்தவரை பயணிகள் கட்டணம் கடுமையாக அதிகரிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. சரக்குக் கட்டணத்தை உயர்த்தினால் அனைத்து பொருட்கள் விலைகளும் அதிகரிக்கும்.
அதனால் பொருட்கள் விலை உயராத அளவுக்கு சரக்கு கட்டணம் குறைந்த அளவுக்கு உயர்த்தப்படலாம் என்றுகூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் ஓரளவு வரி விதிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. வருமான வரி விதிப்பு கடுமையாகஇருக்கும் என்று தெரிகிறது.
பல்வேறு காரணங்களுக்காக ஏற்றுமதிக்கு சலுகை அளிக்கப்படும் என்று தெரிகிறது. அதே சமயம் இந்தியாவில்தயாராகும் பொருட்களுக்கு குறிப்பாக உணவு தயாரிப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இறக்குமதிக்குகூடுதல் வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் என்றுதெரிகிறது. மின்சாரம், ரோடுகள், ரயில்வே ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
இந்த பட்ஜெட் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஒரு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications