அதிமுக போலி அடையாள அட்டைகள் தயாரித்துள்ளது: திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் கள்ள ஓட்டுப் போடுவதற்காக, அதிமுகவிர் போலி அடையாள அட்டைகளைதயாரித்துள்ளனர் என்று தேர்தல் கமிஷனிடம் திமுக புகார் கூறியுள்ளது.

இது குறித்து திமுக செய்தி தொடர்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சா.கணேசன் தலைமைதேர்தல் கமிஷனருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பேக்ஸ் மூலம் ஒரு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவில்கணேசன் கூறியிருப்பதாவது:

அதிமுகவினர் தமிழக அரசு அதிகாரிகளின் உதவியோடு போலி வாக்காளர்களுக்கு பொய்யான அடையாளச்சான்றிதழ்களை உருவாக்கி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பெருமளவில் அஞ்சலக சிறு சேமிப்பு வங்கிக் கணக்குகள் அந்த போலி வாக்காளர்களின் பெயர்களில்தொடங்கப்பட்டுள்ளன. இந்த சிறு சேமிப்பு பாஸ் புத்தகங்கள், தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டையாககாண்பிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

மேலும் மாநில அரசு அதிகாரிகள், ஜாதி சான்றிதழ், பஸ் பாஸ்கள், கிஷான் கார்டுகள் போன்றவைகளைவழங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இவையும் போலியான அடையாள அட்டைகளாகபயன்படுத்தப்பட உள்ளன.

எனவே வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் காண்பிப்பதற்கான மாற்று அடையாள சான்றுகள்பட்டியலிலிருந்து சிறு சேமிப்பு பாஸ் புத்தகம், ஜாதி சான்றிதழ், பஸ் பாஸ்கள், கிஷான் கார்டுகள் ஆகியவற்றையும்,மிக சமீபத்தில் வழங்கப்பட்ட பிற அடையாள அட்டைகளையும் நீக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தமனுவில் கணேசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+