விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கோரி அனைத்துக் கட்சியினர் போராட்டம்
கடலூர்:
சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அனைத்துக்கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
சமீபத்தில் பெய்த கனமழையால் திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் உள்ள பயிர்கள்வெள்ளத்தால் மூழ்கி பெரும் நாசமடைந்தன.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 நிவாரணம் வழங்க வேண்டும், நெல்கொள்முதல்மையங்களை உடனடியாக திறக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள்மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போராட்டம்நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார்.
சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலத்தை தொடங்கிய இந்த போராட்டக்குழு, அரசுக்கு எதிராககோஷங்களை எழுப்பியவாறு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று கோரிக்கை மனுவைக்கொடுத்தனர்.
உடனடியாக இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நான்கு மாவட்ட விவசாயிகளும் சேர்ந்துசென்னை கோட்டை முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications