சென்னைக்கு வந்த பிரான்ஸ் போர் விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆறு போர் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையத்தில்தரையிறங்கின.
சிங்கப்பூரில் போர் விமானங்களின் கண்காட்சி நடக்கிறது. இதில் பிரான்ஸ் நாடும் கலந்து கொண்டுள்ளது.
இதில் பங்கேற்கவுள்ள பிரான்ஸ் நாட்டு விமானப்படையின் 6 போர் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காகநேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
எரிபொருளை நிரப்பிக் கொண்ட பின்னர் இந்த விமானங்கள் புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications