இந்திய ராணுவத்தில் ஊடுருவ முயலும் தீவிரவாதிகள்
டெல்லி:
இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. முயன்றுவருகிறது.
இந்திய ராணுவத்தில் தீவிரவாதிகளைச் சேரச் செய்து அவர்கள் மூலம் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் கொல்லபாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதை உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்துள்ளன.
சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் அனந்த் நாக் மாவட்டத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த குர்ஷித் அகமத் கனாய்என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான். இவனைப் பற்றி விசாரணை நடத்தியபோது அவன் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்தியரிசர்வ் போலீஸ் படையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
அதே போல இவனுடன் ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்த அஸார் கான் என்பவனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்காணவில்லை. இவன் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவன். ஆனால், திருந்திவிட்டதாக உறுதியளித்ததால் ரிசர்வ்போலீஸ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
ஆனால், இவன் மீண்டும் தீவிரவாதத்துக்கே திரும்பி விட்டது தெரியவந்துள்ளது. இவனுக்குத் தரப்பட்ட துப்பாக்கி,குண்டுகளுடன் இவன் ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து ஓடிவிட்டான். இவன் உத்தராஞ்சல் மாவட்டத்திலும் காஷ்மீரிலும்நடமாடி வருவது தெரியவந்துள்ளது. இவன் மேலும் சில தீவிரவாதிகளின் உதவியுடன் முக்கியத் தலைவர்களைத் தீர்த்துக்கட்டும்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளான்.
தீவிரவாதிகளின் வயர்லெஸ் செய்தித் தொடர்பை ராணுவமும் உளவுப் பிரிவினரும் இடைமறித்துக் கேட்டபோது இந்த விவரம்தெரியவந்தது.
இதையடுத்து ராணுவத்தில் இருந்தோ, மத்தியப் படைகளில் இருந்தோ ஓடிப் போனவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்குமாறுமாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்கள் ஐ.எஸ்.ஐ. உத்தரவுப்படி தான் இந்திய பாதுகாப்புப் படைகளில் சேருவதாகவும் உளவுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.இந்திய பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் பயிற்சி முறைகள், ராணுவத்தினரின் ஆயுதங்கள், திட்டங்கள், ரகசிய தாக்குதல்கள்ஆகிய விவரங்களை சேகரிக்க தீவிரவாதிகளை பாதுகாப்புப் படைகளுக்குள் ஊடுருவச் செய்து வருகிறது பாகிஸ்தான்.
இதையடுத்து தீவிரவாதிகள்யாரும் திருந்திவிட்டதாகக் கூறிக் கொண்டு வந்தாலும் அவர்களை படைகளில் சேர்ப்பதை மத்தியஅரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications