நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்டார் கருணாநிதி
சென்னை:
டான்சி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாக உண்மையிலேயேகருதினால் உளப்பூர்வமான நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை விமர்சித்து தன்னுடையபத்திரிக்கையான "முரசொலி"யில் கட்டுரைகள் மற்றும் கார்ட்டூன்கள் வெளியிட்டிருந்தார் என்று தமிழக அரசுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்குப் பதிலளிக்குமாறு கருணாநிதிக்கு உயர் நீதிமன்றத்தின் முதலாவது பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய பதில் மனுவைத் தாக்கல்செய்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் நான் எப்போதும் நீதிமன்றத்தையோ நீதிபதியையோ அவமதித்ததேஇல்லை.
அவமதிப்பை உருவாக்கும் விதத்தில் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. நீதபதிகள் மீதும் நீதித்துறை மீதும்எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உள்ளது.
முரசொலியில் தற்போது நான் ஆசிரியராக இல்லை. அப்பத்திரிக்கையில் நீதித்துறை பற்றி எழுதப்பட்டதால் அதைநீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது.
கடந்த டிசம்பர் 6, 7, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் என்னுடைய புனைப் பெயரில் முரசொலியில் நான் எந்தக்கட்டுரையையும் எழுதவில்லை. என்னைத் தவிர அப்பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவினரும் மற்றஎழுத்தாளர்களும் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.
மேலும் டிசம்பர் 6, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் "முரசொலி"யில் வெளியான கேலிச் சித்திரங்களுக்கும் எனக்கும்சம்பந்தம் இல்லை.
டிசம்பர் 5ம் தேதி வெளியான எனது பேட்டியில் 3 குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் காரணமாக எடுத்துக் கொண்டுஅவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நான் நீதித்துறையை மதிப்பவன் என்பதை அப்பேட்டியில் உறுதியாகக் கூறியிருந்தேன். ஆனால் "நாங்கள் நீதியைமதிக்கிறோம்" என்பதை மட்டும் மனுதாரர் தன் மனுவில் சொல்லாமல் விட்டுவிட்டார்.
நீதியை நீதிபதியைவிட அதிகம் மதிப்பதாகக் கூறுவது அவமதிப்பு ஆகாது; நீதித்துறையுடன் நேரடி முரண்பாடுகொண்டதாகவும் கருத முடியாது.
நான் எந்த நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதத்தில் செயல்படவில்லை. ஆனால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக்கருதினால் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தன்னுடைய பதில் மனுவில் கருணாநிதிகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications