ஆண்டிப்பட்டியிலிருந்து திமுகவினரை வெளியேற்ற போலீசார் முயற்சி: ஆளுநரிடம் திமுக புகார்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் கள்ள ஓட்டுப் போடுவதற்கு வசதியாக அங்குள்ள திமுகவினரை வெளியேற்றபோலீசார் முயற்சி செய்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) கூறினார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும்தொண்டர்களை வெளியேற்றும் முயற்சியில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் முயன்றுவருகின்றனர்.
பின்னர் போலீசாரின் துணையுடனேயே அங்குள்ள வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போட அதிமுகவினர் சதிசெய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. டோக்ராவிடம் திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் தலைமையில் பலரும் புகார்கொடுத்துள்ளனர்.
ஆனாலும் கீழ்மட்டப் போலீசார் திமுகவினரை வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நாங்கள்தான் அங்கு வன்முறையைத் தூண்டுவதற்குச் சதி செய்து வருகிறோம் என்று ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார். திமுக மீது பிறகு பழி சுமத்த வேண்டும் என்பதற்காகவே இப்போது இதுபோன்றகாரணங்களை அவர் இப்போதே தேடிவைத்துக் கொள்கிறார் என்றார் கருணாநிதி.
ஆளுநரிடம் ஸ்டாலின் புகார்:
இதற்கிடையே ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள திமுகவினரை போலீசார் வெளியேற்ற முயல்வது குறித்து தமிழகஆளுநர் ராமமோகன் ராவிடம் சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் இன்று புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
திமுக இளைஞரணித் தலைவருமான ஸ்டாலின், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்தபின் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவினர் இந்த அராஜகச் செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரைச் சந்தித்து ஒரு மனுவைக்கொடுத்துள்ளோம்.
கடந்த மாதம் அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவினர் நடத்திய பல வன்முறைச்சம்பவங்களைப் பற்றி ஆளுநரிடம் எடுத்துக் கூறினேன்.
கண்டமனூரில் 1,000க்கும் மேற்பட்ட புதிய அஞ்சலகச் சிறு சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கான பாஸ் புத்தகத்தைக் காண்பித்து கள்ள ஓட்டுகளைப் போட அதிமுகவினர் முயற்சி செய்து வருவதையும்ஆளுநரிடம் கூறினேன்.
அனைத்தையும் கூர்ந்து கேட்ட ஆளுநர், இது தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்றுஸ்டாலின் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications