முன்னாள் திமுக அமைச்சர் கைது: காவல் நிலையம் முற்றுகை

Subscribe to Oneindia Tamil

கண்டமனூர்:

திமுகவினரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததையடுத்து முன்னாள் அமைச்சர்கள்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுக தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.இதையடுத்து பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். நேற்றிரவில் இருந்தே அவர் காவல் நிலையத்தில்வைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்னொரு முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகதொண்டர்கள் காவல் நிலையத்துக்கு விரைந்தனர். அங்கு அவர்களுக்கும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொன் முத்துராமலிங்கமும் திமுகவினரும் காவல் நிலையத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டம்நடத்தி வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு வாகனங்களில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டி,சேலைகளை திமுகவினர் கொண்டு சென்றதாகக் கூறி அந்த வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்துபிரச்சனை ஆரம்பமானது.

திமுகவினரை தேர்தல் வேலைகள் பார்க்க விடாமல் தடுப்பதற்காக அரசின் உத்தரவுப்படி இந்த வாகனங்களைபோலீசார் கைப்பற்றியுள்ளதாகக் கூறிய திமுகவினர் உடனடியாக அந்த வாகனங்களை விடுவிக்க் கோரிபன்னீர்செல்வம் தலைமையில் காவல் நிலையம் சென்றனர்.

ஆனால், வாகனங்களை விடுவிக்க போலீசார் மறுத்ததால் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதையடுத்துபன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. கண்டமனூர் ஏற்கனவே பதற்றம் நிலவும் பகுதியாகஅடையாளம் காணப்பட்ட இடமாகும். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் திமுகவினரின் காரை எரிக்க அதிமுகவினர் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+