அமைதியாக நடந்து முடிந்தது ஆண்டிப்பட்டி தேர்தல்: 65 சதவீதம் வாக்குப்பதிவு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் வாக்குப் பதிவு எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்தத் தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையர் மிருத்யுத்ய் சாரங்கிசென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார். இரண்டு இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்செயல்படுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் உடனடியாக அந்த எந்திரங்கள் மாற்றப்பட்டு தேர்தல் தொடர்ந்துநடத்தப்பட்டதாகவும் கூறினார்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப் பதிவுதொடங்குவதற்கு முன்பே 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தனர்.
ஆண்டிப்பட்டி முழுவதும் 216 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்கள் வீடியோகேமராக்கள் மூலம் தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்பட்டன.
சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த தேர்தலைவிட 10 சதவீதம் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. நெய்ல்வால் கூறுகையில், தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக 104 பேர் கைது செய்யப்பட்டனர். 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைதானவர்களில் முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் அடங்குவார். தேர்தல் மிகஅமைதியாக நடந்து முடிந்தது என்றார்.
கைதான அனைவருமே திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications