இலங்கை- புலிகள் இடையே வரலாற்றுச் சிறப்பு ஒப்பந்தம்
கொழும்பு:
இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழி வகுக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அமைதி ஒப்பந்தத்துக்குஇலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இன்று ஒப்புதல் அளித்தனர்.
அதே போல விடுதலைப் புலிகளும் இந்த ஒப்பந்தந்துக்கு தங்கள் ஒப்புதலை அளித்துவிட்டதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.
முதலில் ஒரு மாத காலத்துக்கு இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் இதுமேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இப்போது நிரந்தர போர் நிறுத்தத்குக்கு இரு தரப்பினரும் ஒப்புதல்தந்திருப்பது இலங்கையில் அமைதி ஏற்பட வழி வகுக்கும்.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதில் சில் சிக்கல்கள் இருந்து வந்தன. குறிப்பாக புலிகளின் படகுகளை நிறுத்திசோதனையிட கடற்படைக்கு அனுமதி வேண்டும் என இலங்கை கோரியது. ஆனால், இதை புலிகள் ஏற்க மறுத்துவந்தனர்.
இப்போது இந்த விவகாரத்தில் இரு தரப்பினருமே விட்டுக் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஒப்பந்தம்எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை தான் கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையே மோதல் நடந்தது.கடற்படை தான் முதலில் புலிகள் மீது தாக்கியது. இதையடுத்து புலிகள் திருப்பித் தாக்கியதில் ஒரு கடற்படைஅதிகாரி இறந்தார். புலிகள் தரப்பில் சேதம் எவ்வளவு என்று தெரியவில்லை.
இந்தச் சண்டையால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அதையும்மீறி இரு தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தந்திருப்பது தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சிஅளித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications