மதிமுகவினர் விரட்டியடிப்பு: போலீஸ் மீது வைகோ குற்றச்சாட்டு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் உள்ள மதிமுகவினர் தொகுதியை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்படுவார்கள்என்று போலீசார் மிரட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகார் கூறியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டியில் போலீசாரைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை எல்லாம் தொகுதியை விட்டே வெளியேற்றிவிட்டு, கள்ள ஓட்டு போட ஆளுங்கட்சியினர் முயன்று வருகின்றனர்.
மேலும் ஆளுங்கட்சியினரை வாக்களிக்க விடாமல் தடுக்கவும் ஆளுங்கட்சியினர் ஆங்காங்கே குவிந்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை இரவு முதல் மதிமுகவினரை எல்லாம் தொகுதியை விட்டே வெளியே சென்று விடுங்கள்இல்லையேல் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டுகின்றனர்.
தேர்தல் பணியாற்றுவது எங்களது கடமை. ஓட்டுச் சாவடியை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வரக் கூடாதேதவிர மற்ற இடங்களில் நடமாட உரிமை உண்டு.
இது குறித்து தலைமைத் தேர்தல் கமிஷனருக்கும், மாநில தலைமை தேர்தல் கமிஷனருக்கும் பேக்ஸ் மூலம் புகார்அனுப்பியுள்ளோம். தவிர தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைமை தேர்தல் கமிஷனர்சாரங்கி ஆகியோரிடமும் டெலிபோன் மூலம் தகவல் தெரிவித்துள்ளோம்.
போலீசாரை இப்படி அனுமதித்தால் தேர்தல் நியாயமாக நடைபெறாது. போலீசார் தலையீடு இல்லாமல்சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தஅறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
இதே போன்ற குற்றச்சாட்டை திமுக தலைவர் கருணாநிதியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications