வன்முறை இல்லாமல் நடக்கும் வாக்குப் பதிவு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் நேற்றிரவு முதல் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும் அவருடன் காவலில் வைக்கப்பட்டுளள திமுகவினரையும் இன்னொரு திமுக முன்னாள்அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சந்தித்தார்.
நேற்று இரவு வாகனங்களில் ஆண்டிப்பட்டியை சுற்றி வந்த திமுகவினரின் வாகனங்களை போலீசார் கைப்பற்றியதுகுறித்து விசாரிக்கச் சென்ற பன்னீர்செல்வத்தை போலீசார் காவலில் வைத்தனர்.
அவருடன் சென்ற பல திமுகவினரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திக்க ஐ.பெரியசாமிக்குபோலீசார் அனுமதி தந்தனர். கைலி, சட்டையுடன் மிக ரிலாக்ஸ்டாக காட்சியளித்த பன்னீர்செல்வத்துடன்பெரியசாமி பேசிவிட்டுப் புறப்பட்டார்.
என்ன காரணமோ தெரியவில்லை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரஸ்(பத்திரிக்கையாளர் வாகனம்) என்று எழுதி ஒட்டப்பட்ட காரில் தான் வலம் வந்தவண்ணம் இருந்தார்.
வன்முறைச் சம்பவம் ஏதும் இல்லாமல் இதுவரை வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. வன்முறை மூண்டு அதுதொடர்பாக வழக்கு, வம்பு தும்பு வந்து, தேர்தல் முடிவு ஒத்திவைப்பு, மறு தேர்தல் போன்ற பிரச்சனைகள் ஏதும்வந்துவிடாமல் தடுப்பதில் தீவிர அக்கறை காட்டி வருகிறது அரசு.
அப்படி ஏதும் பிரச்சனைகள் வந்தால் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்பதில் சிக்கல் வரலாம் என்பதால்ஆண்டிப்பட்டிக்குள் எந்தவிதமான வன்முறையும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்குஉத்தரவிடப்பட்டது.
2 டி.ஐ.ஜிக்கள், 11 எஸ்.பிக்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான லோக்கல் போலீஸ், அதிரடிப் படை போலீசார்,மத்திய ரிசர்வ் போலீசார் இந்த சிறிய தொகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆயுதம் தாங்கிய போலீசாருடன் நடமாடும் கண்காணிப்பு வாகனங்களும் நூற்றுக்கணக்கில்ஆண்டிப்பட்டியை சுற்றிக் கொண்டுள்ளன.
தேர்தல் ஆணையமும் தன் பங்குக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை தொகுதியில் நிறுத்தி நேரடியாககண்காணித்து வருகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications