நாளை வாக்கு எண்ணிக்கை: ஜெயிப்பாரா ஜெ.?
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்குகிறது.
ஆண்டிப்பட்டியை அடுத்த சிம்மராஜப்ப நாயக்கன் பட்டியில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில்வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஒரு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையும் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில்தான் நாளை வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. கல்லூரியைச் சுற்றிலும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லூரியைச் சுற்றிலும் ஆயுதமேந்திய போலீசார் இரவு பகலாகக் காவல் காத்து வருகின்றனர்.
மொத்தம் 18 ரவுண்டு வரை வாக்குகள் எண்ணப்படவுள்ளன. ஒரு ரவுண்டுக்கு 14 மேஜைகளைப் போட்டுவாக்குகள் எண்ணப்படவுள்ளன. அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் இடத்திற்குள்அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலேயேவாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் வெகு விரைவாக முடிவுகள் தெரிந்துவிடும்.
காலை 11 மணிக்கெல்லாம் தேர்தல் முடிவுகள் தெரிய ஆரம்பித்துவிடும். 12 மணிக்கெல்லாம் ஆண்டிப்பட்டிதொகுதி யாருக்குச் சொந்தமாகும் என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும்.
அதிமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக சார்பாக வைகை சேகர் என்ற பாலசுந்தரம்,மதிமுக சார்பாக ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் சார்பாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் 20சுயேச்சைகள் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் ஜெயலலிதாவே வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் மட்டுமில்லாமல் பிறகட்சிக்காரர்களும் பெரிதும் நம்புகின்றன. எப்படியும் நாளை காலை 11 மணிக்குள் ஜெயலலிதா வெற்றி பெறுவாராஇல்லையா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications