வாக்களிக்க கூடுதல் ஆவணங்கள்: தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி கோபம்
சென்னை:
ஆண்டிப்பட்டி வாக்காளர்கள் வாக்களிக்க 2 கூடுதல் ஆவணங்களை வழங்க தமிழக தேர்தல் கமிஷன் எந்தகட்சியின் கோரிக்கைப்படி அனுமதியளித்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர்கள் வாக்களிக்க 16 ஆவணங்களை மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆண்டிப்பட்டியில்ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் பெயர்கள் விலக்கப்படாமல் வாக்காளர் பட்டியலில் இருந்தன.
அவர்களிடம் 16 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். அது இல்லாத காரணத்தால் தேர்தல் கமிஷன்,ஆளுங்கட்சியின கட்டளைக்கு இணங்க அவசர அவசரமாக 19ம் தேதி ஒரு புதிய ஆணை பிறப்பித்தது.
இந்த ஆணையின் படி 16 ஆவணங்களில் ஒன்று கூட இல்லாவிட்டாலும், கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒருசான்றிதழ் பெற்று வந்தாலே வாக்களிக்கலாம் என்று அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் குடிசை வாரியம்அளித்துள்ள அட்டையை காண்பித்தாலும் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவுகள் மத்திய தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. மத்திய தேர்தல் கமிஷன்எப்போது இந்த அனுமதியை அளித்தது? யாருடைய அல்லது எந்த கட்சியின் கோரிக்கையின் படி தமிழக தேர்தல்கமிஷன், மத்திய தேர்தல் கமிஷனை இவ்வாறு கேட்டுக் கொண்டது?
தேர்தலுக்கு முதல் நால் இப்படி ஒரு அவசர அறிவிப்பு வெளியிடக் காரணம் என்ன? இந்த அறிவிப்பு போலிவாக்களார்களுக்கு, கிரமா அதிகாரிகள் மூலம் உண்மை வாக்காளர்கள் என்று உயிர் ஊட்டத் தானே? இதற்கு உரியஇடத்தில் விளக்கமளிக்க தேர்தல் கமிஷன்கள் கடமைப்பட்டிருக்கின்றன.
இந்த அறிவிப்பில் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பது நெருப்புக் கோழிபுதருக்குள் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு, உடல் முழுமையும் மறைத்துக் கொண்டதாக நினைக்கும்மூடத்தனத்துக்கு சிறிதும் குறைந்ததாக தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications