"அம்மா" பிறந்த நாளன்று அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள்
சென்னை:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த சென்னை தம்புச் செட்டித் தெரு காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்த அதிமுகவினர்ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு நாளை (24ம் தேதி) 54வது வயது பிறக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதிலும்அதிமுகவினர் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் ஒன்றாக பிரபலமானஅனைத்துக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், தம்புச் செட்டித் தெருவில் உள்ளது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காளிகாம்பாள் கோவில். மராட்டியமன்னன் சத்ரபதி சிவாஜி வந்து வணங்கிய சிறப்பு கொண்டது இந்தக் கோவில். சமீபத்தில்கூட சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் இங்கு வந்து வணங்கிச் சென்றார்.
இந்தக் கோவிலில் 24ம் தேதி சிறப்பு பூஜைக்கு வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் சேகர் பாபு ஏற்பாடுசெய்துள்ளார். அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் அன்று செய்யப்படுகிறது.
புஷ்ப அலங்காரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளித் தேரும் இழுக்கப்படுகிறது. அமைச்சர்பொன்னையன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதுதவிர அன்றைய தினம் 254 பேருக்கு இலவச வேட்டி, சேலையையும் சேகர் பாபு வழங்குகிறார். இதேபோல,சென்னையில் உள்ள மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்ஆகியவற்றிலும் பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications