இலங்கை: அமலுக்கு வந்தது நிரந்தரப் போர்நிறுத்தம்
வவுனியா:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான நிரந்தரப் போர்நிறுத்தம் இன்று (சனிக்கிழமை) முதல்அமலுக்கு வந்தது.
இந்த நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி இன்று நள்ளிரவு முதல்தான் இது அமலுக்கு வருவதாக இருந்தது.
ஆனால் இன்றே வவுனியா பகுதிகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லாத ராணுவத்தினர் தெருக்களில் சர்வசாதாரணமாக நடமாடுவதைப் பார்க்க முடிகிறது.
இலங்கை முழுவதும் எங்குமே துப்பாக்கிச் சத்தம் கேட்காமல் அமைதியாக இருந்தது.
நிரந்தரப் போர்நிறுத்தத்தைப் பார்வையிடுவதற்காக நார்வே, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த அதிகாரிகள் விரைவில் வரவுள்ளனர்.
சந்திரிகா அதிருப்தி:
இதற்கிடையே இந்த நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து கவலை அடைந்திருப்பதாக இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இலங்கை அரசியல் சட்ட சாசனத்தை மீறி ரணில் தன்னுடைய ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அமைச்சரவையிலோ நாடாளுமன்றத்திலோ ஒப்பந்தத்தை சமர்ப்பிக்காமலேயே ரணில் அதில்கையெழுத்திட்டுள்ளார் என்றும் சந்திரிகா அதிருப்தி தெரிவித்தார்.
இந்தியா, உலக நாடுகள் வரவேற்பு:
இந்நிலையில் இந்த நிரந்தரப் போர்நிறுத்தத்தை இந்தியா உள்பட பல நாடுகளும் வரவேற்றுள்ளன.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில்அந்நாட்டில் நிரந்தர அமைதிக்கும் வழி வகுக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்நிருபமா ராவ் கூறியுள்ளார்.
இதேபோலவே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு அமோகவரவேற்பை அளித்துள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications