அயோத்தி: நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளி
டெல்லி:
அயோத்தி விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியைக் கிளப்பியது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கியது. இன்று ரயில்வேபட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்காக லோக்சபா காலை தொடங்கியது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் எழுந்து அயோத்தி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரினர்.கேள்வி நேரத்தை ரத்து செய்யக் கோரினர்.
விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் கோவில் கட்டுமானப் பொருள்களுடன் அயோத்தியில் குவிந்துகொண்டிருப்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருவதை எதிர்க் கட்சியினர் சுட்டிக் காட்டினர். அங்குஅவர்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பிரதமர் முதலில் விளக்க வேண்டும் என்றனர்.
இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் எம்.பிக்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது பேசிய பிரதமர்இது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாவும் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லைஎன்றும் கூறினார்.
இதையடுத்து எதிர்க் கட்சி எம்.பிக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.இதனால் குழப்பம் நிலவியது. அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
இதே போல ராஜ்யசபாவிலும் அயோத்தி பிரச்சனை வெடித்தது. ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் எதிர்க் கட்சிகள் சமாதானமடைந்து இருக்கைக்குத் திரும்பியவுடன் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் நிதிஷ்குமார்.
ஆனால், ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் போராட்டம் தொடர்ந்ததால் அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படடது.
இன்று மாலை அயோத்தி பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்டியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications