டெல்லி விரைந்தார் இளங்கோவன்: தங்கபாலு மீது நடவடிக்கை
சென்னை:
அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தங்கபாலு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையுடன்விவாதிக்க தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நேற்று இரவு டெல்லி விரைந்தார்.
அதிமுகவை தீவிரமாக ஆதரித்து வருபவர் கே.வி. தங்கபாலு. முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழககாங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். எப்போதுமே ஜெயலலிதாவுன் விசுவாசியாக இருப்பவர். கடந்தமுறைஅதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கியக் காரணமாக இருந்தவர்.
ஆனால், அதிமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து அவர் அதிமுகவைஆதரித்து வந்தார். ஆண்டிப்பட்டி தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என காங்கிரஸ்கட்சியினருக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தங்கபாலுவுக்கும் அவரதுஆதரவாளர்களாக உள்ள சில மாவட்டத் தலைவர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால்,இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க தங்கபாலு மறுத்துவிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள தன் மீது நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைவரானஇளங்கோவனுக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தார்.
இதையடுத்து இருவருமே தினமும் பத்திரிக்கைகள், அறிக்கைகள் மூலம் மோதி வருகின்றனர்.
இந் நிலையில் இளங்கோவன் நேற்றிரவு திடீரென டெல்லி விரைந்தார். அவர் சோனியா காந்தியையும், தமிழககாங்கிரஸ் விவகாரங்களை கவனித்து வரும் ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்து தங்கபாலு மீது நடவடிக்கைஎடுக்கக் கோருவார் என்று தெரிகிறது.
சட்டசபையில் யசோதா தலைமையில் காங்கிரஸ் கட்சியை உடைக்க அதிமுக மேற்கொண்டுள்ள முயற்சிகளையும்அவர் விளக்குவார்.
தங்கபாலு மீது விரைவில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications