For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினுக்கு 50-வது பிறந்த நாள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 50வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிலிருந்து காலை 6 மணியளவில் தனது தந்தை இருக்கும் கோபாலபுரம் வீட்டிற்குமனைவி, குழந்தைகளுடன் கிளம்பினார். கிளம்புவதற்கு முன்பு திமுகவினர் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துத்தெரிவித்தனர்.

கோபாலபுரம் வீட்டுக்கு வந்த அவர் அங்கு உள்ள அண்ணா, பெரியார் மற்றும் தாத்தா, பாட்டி படங்களுக்கு மாலை அணிவித்துவணங்கினார். பின்னர் தந்தை கருணாநிதி மற்றும் தாயார் தயாளு அம்மாள் ஆகியோரின் கால்களில் விழுங்கி ஆசிர்வாதம்பெற்றார்.

அதன் பிறகு 50 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை வெட்டினார். கருணாநிதி, தயாளு அம்மாள், மனைவி துர்கா, மகன்உதயநிதி ஆகியோருக்கு கேக்கை வழங்கினார். புது மருமகள் கிருத்திகாவும் உடன் இருந்தார்.

அதன்பின்னர் தி.நகரில் உள்ள கல்யாண மண்டபத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள்நகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், வைரமுத்து, நெப்போலியன், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்,திருநாவுக்கரசு, மு.க.அழகிரி உள்ளிட்டோர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X