நாடாளுமன்றத்துக்கு ராசியில்லாத 13
டெல்லி:
13க்கும் நாடாளுமன்றத்துக்கும் ராசியில்லை என்று தெரிகிறது.
இப்போது நடந்து வருவது 13வது லோக்சபா. 13வது லோக் சபாவில் இதுவரை 13 பேர் மரணடைந்துவிட்டனர்.இதில் கடைசியாக சேர்ந்திருப்பவர் சபாநாயகர் பாலயோகி.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த லோக்சபா சபாநாயகர்பாலயோகியின் உடல் சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணைஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
எதிர்க் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், குஜ்ரால், நரசிம்ம ராவ்,லோக் சபா துணை சபாநாயகர் பி.எம். சயீத், ராஜ்யசபா துணைத் தலைவர் நஞ்மா ஹெப்துலலா ஆகியோரும்அஞ்சலி செலுத்தினர்.
பாலயோகியின் உடலுடன் அவரது மகன் ஹரிஷ், மகள் தீப்தி ஆகியோரும் உடன் வந்தனர். இன்று பிற்பகலிலேயேசிறப்பு விமானத்தில் பாலயோகியின் உடல் மீண்டும் ஆந்திர மாநிலம் கொண்டு செல்லப்படும். அங்கு அவரதுசொந்த ஊரான மும்மடிவாரத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
தலைவர்கள் அஞ்சலிக்காகவும், அவர் வசித்து வந்த சபாநாயகர் இல்லத்தில் அஞ்சலிக்காகவைக்கப்படுவதற்காகவும் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மிகுந்த நம்பிக்கைக்குறியவர் பாலயோகி. தனது நியாயமானநடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தின் அனைத்துத் தரப்பினருடனும் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
தீவிர மேல்மருவத்தூர் பக்தர். 51 வயதான பாலயோகிக்கு விஜயகுமாரி என்ற மனைவியும் 3 மகள்களும் ஒருமகனும் உள்ளனர்.
நேற்று தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் குவாடலங்கா-பீமாவரம்இடையே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாலயோகி மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:
பாலயோகியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேற்கு வங்க சட்டசபையும் ஒத்தி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications