அயோத்தி விவகாரம்: பிரதமருக்கு கருணாநிதி ஆதரவு
சென்னை:
அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தான் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரதமரின் முடிவுக்குநாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ராமர் கோவில் கட்ட அனுமதித்தால் தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்து திமுக விலகும் என்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தான் கருணாநிதி கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.க. தலைவர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.கருணாநிதியின் இந்தப் பேச்சு குறித்து மத்திய அமைச்சர் முரசொலி மாறனிடம் மத்திய பா.ஜ.க. தலைவர்கள்பேசியுள்ளனர். தமிழக பா.ஜ.க. தலைவர்களும் கருணாநிதியுடன் பேசியதாகத் தெரிகிறது.
இதையடுத்து தனது நிலையில் இருந்து கொஞ்சம் இறங்கி வந்து கருணாநிதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீதிமன்ற தீர்ப்பின்படியோ அல்லது இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகோ தான்அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க முடியும் என்ற பிரதமரின் முடிவுக்கு நாட்டு மக்கள் அனைவரும்கட்டுப்பட வேண்டும்.
அப்போது தான் நாட்டில் அமைதியும், ஒற்றுமையும் இருக்கும்.
சில மதவாதிகள், சில அரசியல் சூழ்நிலைகளுக்காக மதக்கலவரத்தை தூண்டி விடுகிறார்கள். இதற்கு மக்கள்பலியாகிவிடக் கூடாது.
சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாடுபடவேண்டும் என்ற கருத்தில் திமுக நிலையாக உள்ளது.
மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் குலைப்பவர்கள் மனிதக்குலத்துக்கே விரோதிகள் என்று அந்தஅறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications