15ம் தேதி கோவில் கட்டும் பணி ஆரம்பிக்கும்: வி.எச்.பி.
டெல்லி:
குஜராத்தில் கலவரத்தில் 450 பேர் பலியாகியுள்ள நிலையில் அயோத்தியில் வரும் 15ம் தேதி ராமர் கோவில் கட்டும்பணியை ஆரம்பித்தே தீருவோம் என விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.
கோவில் கட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அயோத்தியைச் சுற்றியும் குஜராத் போன்ற மாநிலங்களிலும்வெள்ளைக் கற்களால் ஆன ஆயிரக்கணக்கான தூண்களை வி.எச்.பி. செதுக்கி சாலையோரங்கில் போட்டுவைத்துள்ளது. இந்தத் தூண்களை கரசேவகர்களைக் கொண்டு வரும 15ம் தேதி முதல் அயோத்திக்கு எடுத்துச்செல்ல ஆரம்பிப்போம் என வி.எச்.பி. அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வி.எச்.பி. இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த அமைப்பைக் கட்டுப்படுத்த இதுவரை மத்திய அரசு எந்தவிதமான தீவர நடவடிக்கைகளும் எடுக்கவில்லைஎன்று அனைத்துத் தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளன.
கோவில் கட்ட இந்த அமைப்புக்கு அனுமதி தந்தால் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவோம் என திமுகபோன்ற கட்சிகள் நேரடியாக எச்சரித்துவிட்டன. இந் நிலையில் கோவில் கட்டினால் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிகவிழும் என்பதால் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்குமாறு பிரதமர் வாஜ்பாயும், உள்துறை அமைச்சர்அத்வானியும் வி.எச்.பியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் திட்டத்தை இப்போதைக்கு கைவிடுமாறு இந்த அமைப்பிடம் ஆர்.எஸ்.எஸ். மூலமாக மத்திய பா.ஜ.க.அரசு கெஞ்சி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்சும் சில யோசனைகளை வி.எச்.பியிடம் தெரிவித்துள்ளது.
இந்த யோசனைகள் குறித்து விவாதிக்கவும், அயோத்தி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துஆலோசிக்கவும் வி.எச்.பியின் முக்கியக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது.
டெல்லியில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகமான சங்கட் மோச்சன் ஆஸ்ரமத்தில் இக் கூட்டம் காலை10 மணிக்குத் தொடங்கியது.
இது குறித்து வி.எச்.பியின் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீன்பாய் தோகாடியா கூறுகையில்,
ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் மகான் பரமஹம்ஸ் ராமசந்திர தாஸ், பா..ஜ.க. எம்.பி சுவாமிசின்மயானந்தா மற்றும் மூத்த மதத் தலைவர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மார்ச் 15 கோவில் கட்டும் பணி குறித்தும் எங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும்விவாதிக்கவுள்ளோம் என்றார்.
பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன் இன்று டெல்லி வருகிறார். பா.ஜ.க. கோரிக்கையின்படி அவர்டெல்லி விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக வி.எச்.பி. தலைவர்களிடம் மன்றாடிப் பார்க்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications