மீண்டும் கோட்டையில் ஜெ.: சுண்டல் வியாபாரம் ஜோர்
சென்னை:
மீண்டும் கோட்டை கலகலக்க ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிவிட்டதால் அவரிடம் மனுக்கள் தர தினசரிஅங்கு கூடும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர்.
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன் அவரிடம் கோரிக்கை மற்றும் குறைகளைக் கூறி மனுக்களைக் கொடுக்க பொதுமக்கள்ஏராளமான அளவில் தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
முன்பு முதல்வராக இருந்தபோது இந்தப் பழக்கத்தை ஜெயலலிதா ஏற்படுத்தியிருந்தார். பன்னீர் முதல்வரானவுடன் சில நாட்கள்மனு வாங்கினார். அதன் பின்னர் அதை விட்டுவிட்டார்.
இப்போது மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதாவும் பதவியேற்ற முதல் நாளான சனிக்கிழமையே பொதுமக்களிடம் நேரடியாகமனுக்களை வாங்கினார். அதேபோல நேற்றும் நேரடியாக வந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
காலையில் அவர் கோட்டைக்கு வந்தபோது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் அவரை நோக்கி ஓடினர்.
இதைத் தொடர்ந்து காரை விட்டு இறங்கிய ஜெயலலிதா நேரடியாக தனது அலுவலகத்திற்கு செல்லாமல் பொதுமக்கள் இருந்தபகுதியை நோக்கி வந்தார். அங்கு இருந்தவர்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டார்.
சுமார் 10 நிமிடம் மனுக்கள் வாங்கிய ஜெயலலிதா பின்னர் தனது அலுவலகத்திற்குச் சென்றார்.
ஜெயலலிதாவின் இந்த மனுக்கள் வாங்கலால் மனு கொடுப்பவர்களுக்கு பலன் ஏற்படுகிறதோ இல்லையோ அங்கு கடலை,சுண்டல், கீற்று மாங்காய், மோர், இளநீர், அன்னாசிப் பழம் விற்பவர்களுக்கு படுஜோராய் வியாபாரம் நடக்கிறது.
அப்புறம் ஜெயலலிதா படம் போட்ட, கருப்பு-சிவப்பு-வெள்ளை பார்டர் போட்ட லெட்டர் பேடு விற்பவர்களுக்கும்ஜெகஜோதியான வியாபாரம் தான்.
அதிமுக பார்டர் போட்ட சேலை, ரவிக்கைகள் கூட சில நேரங்களில் கோட்டை முன் விற்பனைக்குவந்துவிடுகின்றன.












Click it and Unblock the Notifications