அயோத்தி: பிரதமர்-சங்கராச்சாரியார் நள்ளிரவில் ஆலோசனை
டெல்லி:
பிரதமரின் சார்பில் வி.எச்.பியுடன் பேச டெல்லி வந்துள்ள காஞ்சி சங்கராச்சாரியாரை தேசிய ஜனநயாகக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை சந்தித்துப்பேசினார்.
நேற்றிரவில் சங்கராச்சாரியார் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவுவரை இச் சந்திப்பு நீடித்தது.
வரும்ம் 12ம் தேதி முதல் கோவில் கட்டத் தேவையான தூண்களை அயோத்திக்குக் கொண்டு செல்லவும், 15 தேதிகோவில் கட்டும் பணியைத் தொடங்கவும் விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.
இதனால் குஜராத் உள்ளிட்ட இடங்களில் பெரும் வன்முறை பரவியுள்ள நிலையிலும் வி.எச்.பி. தனது நிலையில்பிடிவாதமாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசும் வி.எச்.பியிடம் கெஞ்சிக் கூத்தாடி வருகிறது.
வி.எச்.பி. தலைவர்களை சமாளிக்க காஞ்சி சங்கராச்சாரியாரின் உதவியை மத்திய அரசு நாடியது. அவருக்கு சிறப்புவிமானம் அனுப்பி டெல்லி அழைத்துச் சென்றது. அவரும் நேற்று வி.எச்.பி. தலைவர்களுடன் பேசினார். ஆனால்,பலன் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து பிரதமரை சங்கராச்சாரியார் சந்தித்து வி.எச்.பி. தலைவர்களுடன் பேசியது குறித்து விளக்கினார்.அப்போது அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு அவர்பிரதமரை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் கோவில் தூண்களுக்கு இந்த இடத்தில் வைத்து பூஜை செய்யவும்அனுமதிக்க வேண்டும் என அவர் வாஜ்பாயை அறிவுறுத்தினார்.
சிக்கலில் உள்ள நிலத்தைச் சுற்றியுள்ள பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடம்ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வாஜாபாயிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அவ்வாறு இடத்த்ைத தந்து பூஜை செய்ய அனுமதித்தால் நாடு முழுவதும் வன்முறை பரவும் என்பதைவிளக்கிய வாஜ்பாய் இந்தத் திட்டத்தை கைவிடச் செய்யுமாறு வி.எச்.பி. தலைவர்களிடம் விளக்குமாறு காஞ்சிசங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் அவரை பெர்னாண்டஸ் காலையில் சந்தித்துப் பேசினார். தெற்கு டெல்லியில் உள்ள காமாட்சிகோவிலில் தங்கியுள்ள சங்கராச்சாரியாரை பெர்னாண்டஸ் அதிகாலையில் சந்தித்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியும் அவரை நேற்றிரவில் சந்தித்தார். இவர்தீவிர வி.எச்.பி. ஆதரவாளர்.
இதற்கிடையே வாஜ்பாய்-சங்கராச்சாரியார் சந்திப்பின்போது நடந்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்க வி.எச்.பி.தலைவர்கள் இன்று மீண்டும் டெல்லியில் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications