குஜராத் வன்முறை: இதுவரை 532 பேர் கொலை

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

பெருமளவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளபோதிலும் குஜராத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது.

கொலைகள் குறைந்துள்ளபோதிலும் வீடுகளில் புகுந்து பொருள்களைக் கொள்ளையடிப்பது, கடைகளைஉடைத்துத் திருடுவது, வழியில் செல்வோரிடம் பணம், நகைகளைப் பறிப்பது போன்ற செயல்கள் நடந்துவருகின்றன.

நேற்று இரவில் சூரத் நகரில் கடைகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆதிவாசிக் கும்பல் மீது போலீசார்துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இக் கும்பல் கடைகளுக்கு தீ வைக்கவும் முயன்றது.இது தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல சூரத் நகரில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

அகமதாபாத்தில் அமைதி நிலவினாலும் எந்த நேரத்திலும் மீண்டும் வன்முறை வெடிக்கும் அளவுக்கு நிலைமைபதற்றமாக உள்ளது. இந் நகரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் உள்ளது.கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ராணுவம் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகிறது.

அம் மாநில போலீசாரை நம்பிப் பயனில்லை என்பதால் இந் நகரில் பாதுகாப்புப் பண ராணுவத்தின் வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் 5 நாள் மதக் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துவிட்டது. அமதாபாத்தில்மட்டும் 242 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 97 பேர் இறந்துள்ளனர். இதில் 40 பேர் அகமதாபாத்தில் இறந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல்லாயிரணக்கானவர்கள் அரைகறையாய் எரிக்கப்பட்டும்,வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+