தலைக்கு மேல் வேலை இருக்கு: ஜெயலலிதா
சென்னை:
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று கருணாநிதி கூறுவதுபச்சைப் பொய் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு திமுக எம்.எல்.ஏக்களுக்குஅழைப்பு வரவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு ஜெயலலிதா அளித்துள்ள பதில்:
பதவியேற்பு விழாவிற்கு திமுக சட்டசபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை என வேண்டுமென்றே பச்சைப்பொய்யை கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அனைத்து எம்.பி.க்களும் கட்சி பாகுபாடின்றிஅழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.
அழைப்பிதழ் கிடைத்திருந்தும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என திமுகவினர் முடிவு எடுத்திருந்தால்அதற்கு தமிழக அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.
தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று திமுகவில் உள்ள அன்பழகன், ஸ்டாலின்போன்றவர்கள் விரும்பினாலும், காழ்ப்புணர்ச்சியையும், பொறாமையையும் அடிப்படையாகக் கொண்டுகீழ்த்தரமான பழைய பாணியிலேயே அரசியல் நடத்தும் வழக்கத்தில் இருந்து கருணாநிதி விடுபடவில்லை என்றுதெரிகிறது.
ஆண்டிப்பட்டி தேர்தல் சமயத்தில் பயணியர் விடுதியில் கருணாநிதி தங்குவதற்கு தமிழக அரசு அனுமதிகொடுக்கவில்லை என்றும், அதற்கு நான் தான் பொறுப்பு என்றும் ஒரு பொய்யை கருணாநிதி கூறினார்.
உண்மையில் அந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் 1996-2001ல் கருணாநிதி முதல்வராகஇருந்த போது முன்னாள் முதல்வரான எனக்கு தமிழகத்தில் எந்தவொரு அரசினர் விடுதியிலும் தங்க அனுமதிகொடுக்கவில்லை.
நான் அதை பெரிதுபடுத்தி கூக்குரல் எழுப்பவில்லை. கருணாநிதிக்கு தெரிந்த பண்பு அவ்வளவு தான் என்றுவிட்டுவிட்டேன்.
இதற்கு மேல் கருணாநிதிக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர் தினமும் இப்படிபொய்கள் நிரம்பிய அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார். அதற்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் இதற்கே நேரம் சரியாக இருக்கும்.
எனக்கு அரசு நிர்வாகப் பணி தலைக்கு மேல் உள்ளது. கருணாநிதியின் பேட்டிகளுக்கு இனி நான் பதில்அளிப்பதாக இல்லை. மக்களும் அவர் கூறுவதை நம்ப மாட்டார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications