அயோத்தி: சங்கராச்சாரியாரின் முயற்சிகளுக்கு வெற்றி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாக நிலத்தில் கோவில் கட்ட அனுமதிப்பது குறித்து யோசிப்பதாக அகில இந்தியமுஸ்லீம் சட்ட வாரியம் கூறியுள்ளது. இதனால் இந்தப் பிரச்சனையில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது.

காஞ்சி சங்கராச்சாரியாரின் யோசனையை ஏற்று முஸ்லீம் சட்ட வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

அயோத்தியில் பிரச்சனைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கும், பாபர்மசூதி பாதுகாப்புக் கமிட்டிக்கும் மோதல் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் அந்த இடத்தையும், அதைச் சுற்றியிருந்த 67 ஏக்கர் நிலத்தையும் மத்திய அரசுகையகப்படுத்தியது. இந்த நிலம் முழுவதுமே மத்தியப் படைகளின் பாதுகாப்பில் உள்ளது.

இந்த 67 ஏக்கர் பிரச்சனைக்குள்ளாகாத நிலமாகும். இது ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்குச் சொந்தமானது.ஆனால், பாபர் மசூதி இருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள இந்த நிலத்தில் ஏதாவது வழிபாட்டுத் தலம்கட்டப்பட்டால் கூட பிரச்சனை உருவாகும் என்பதால் இந்த நிலத்தையும் மத்திய அரசே தனது கட்டுப்பாட்டில்வைத்துக் கொண்டுள்ளது.

இப்போது இந்த நிலத்தில் தான் கோவில் கட்டப் போவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் கூறி வருகிறது. இதனால் இந்தநிலத்தை தங்களிடம் தர வேண்டும் என வி.எச்.பி. நிர்பந்தித்து வருகிறது.

இந்த இடத்தை கோவில் கட்டத் தந்தாலும் பிரச்சனை வரலாம் என மத்திய அரசு அஞ்சுவதால் வி.எச்.பியிடம்கோவில் கட்டும் பணியையே கைவிடுமாறு பிரதமர் வாஜ்பாய் கோரி வருகிறார்.

இந் நிலையில் நேற்றிரவு சிறப்பு விமானத்தில் டெல்லி வந்த காஞ்சி சங்கராச்சாரியார் பிரதமர் வாஜ்பாய், வி.எச்.பி.தலைவர்கள், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி, முஸ்லீம் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தினார்.

இந்திய முஸ்லீம் சட்ட வாரியத்தைச் சேர்ந்த 11 பேர் அதன் பொதுச் செயலாளர் சையத் நிஜாமுதீன் தலைமையில்இன்று காலை 11 மணிக்கு சங்கராச்சாரியாரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது. அப்போதுபிரச்சனைக்குள்ளாகாத நிலத்தில் கோவில் கட்டிக் கொள்ள வி.எச்.பிக்கு அனுமதி தர வேண்டும் என அவர்களிடம்சங்கராச்சாரியார் கோரிக்கை விடுத்தார். அதே போல நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை பாபர் மசூதி இருந்த இடத்தில்வி.எச்.பி. எந்த கோவிலையும் கட்டாது எனவும் உறுதியளித்தார்.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வி.எச்.பி. தலைவணங்கும் எனவும் அவர் உறுதியளித்தார். அதே போலடிசம்ப்ர 6ம் தேதி இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தைச் சுற்றி ஒரு பெரிய சுவர் எழுப்பிவிடலாம் எனவும்அந்த இடம் குறித்து நீதிமன்றமே முடிவு செய்யட்டும் எனவும் கூறினார்.

இந்த யோசனையை இஸ்லாமிய சட்ட வாரியம் வரவேற்றது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரைபிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் வி.எச்.பி. அமைப்பினர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் சட்ட வாரியபிரதிநிதிகள் கூறினர்.

இது குறித்து சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இலியாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,

சட்ட வாரியத்தின் அவசரக் கூட்டம் சில தினங்களில் கூடுகிறது. இதில் சங்கராச்சாரியாரின் யோசனை குறித்துவிவாதிக்கப்படும். எங்கள் முடிவை வரும் 15ம் தேதிக்குள் சங்கராச்சாரியாரிடமே தெரிவிப்போம்.

சங்கராச்சாரியார் கொடுத்துள்ள யோசனைப்படி பாபர் மசூதி இருந்த இடத்தைச் சுற்றி ஒரு பெரிய சுவர்எழுப்பப்படும். இதற்கு வி.எச்.பியும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குகட்டுப்படுவோம் என்றும் வி.எச்.பியை சங்கராச்சாரியார் ஒப்புக் கொள்ள வைத்துள்ளார்.

அதே போல மசூதி இருந்த இடத்தைச் சுற்றியுள்ள பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தை வி.எச்.பி. கேட்கிறது. இதைவி.எச்.பியிடம் தர வேண்டும் என சங்கராச்சாரியார் எங்களை அறிவுறுத்தினார். அவரது யோசனை ஒப்புக்கொள்ளும்படி உள்ளது.

மேலும் பாபர் மசூதி இருந்த பிரச்சனைக்குரிய நிலம் குறித்து நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளட்டும். அதை இருதரப்பினரும் ஏற்க வேண்டும் என்றார். அதை நாங்களும் ஒப்புக் கொண்டோம். வி.எச்.பியையும அவர் ஒப்புக்கொள்ளச் செய்துள்ளார்.

எங்களது அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரிய நிர்வாகிகள் கூட்டம் அவசரமாகக் கூடி நல்ல முடிவெடுக்கும். 15ம்தேதிக்குள் சங்கராச்சாரியாரிடம் பதில் தரப்படும் என்றார்.

இந்த சமரச பேச்சுவார்த்தைகளின்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனும் உடனிருந்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சங்கராச்சாரியார்,

இந்த விவகாரத்தில் இரு தரப்பினருமே விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளனர். பிரச்சனைக்குறிய நிலம் குறித்துநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வி.எச்.பி. முதல்முதலாக ஒப்புக் கொண்டுள்ளது. அதே போல பிரச்சனைக்குள்ளாகாதநிலத்தை வி.எச்.பிக்குத் தர முஸ்லீம்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த நிலத்தை நரசிம்மராவ் அரசு தான் கையகப்படுத்தியது. இதை வி.எச்.பியிடம் திருப்பித் தருவதில் சட்டப்படிஎந்த சிக்கலும் இல்லை. ஆனால், மத்திய அரசு 26 கட்சிகளைக் கொண்டது. அனைத்துக் கட்சிகளுடனும் பேசித்தான் பிரதமர் இதில் முடிவெடுக்க முடியும்.

குஜராத்தில் நடந்தது மாதிரி ஒரு சம்பவம் இனியும் நடக்கக் கூடாது. நிலத்தை வழங்கினால் வி.எச்.பிக்குத் தானேலாபம், எங்களுக்கு என்ன கிடைக்கும் என முஸ்லீம் சட்ட வாரியத்தினர் என்னிடம் கேட்டனர். இதில் லாப, நஷ்டம்குறித்து பேச ஒன்றுமில்லை என்று அவர்களிடம் கூறினேன். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக காஞ்சியில்இருந்து ஓடோடி வந்துள்ளேன். என் கோரிக்கையை ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அவர்களும் என்பேச்சுக்கு மதிப்பளித்து நிலத்தைத் தர ஒப்புக் கொண்டுவிட்டனர் என்றார் சங்கராச்சாரியார்.

எவ்வளவு நிலம் தரப்படும், எநதப் பகுதி நிலம் தரப்படும் என்பது குறித்து எந்த விவரத்தையும் சங்கராச்சாரியார்கூறவில்லை. ஆனால், இது குறித்தும் அவர் வி.எச்.பி, முஸ்லீம் சட்ட வாரியம், மத்திய அரசுடன் பேச்சுநடத்தியிருப்பதாகத் தெரிகிறது.

சங்கராச்சாரியாரின் யோசனைக்கு இஸ்லாமிய சட்ட வாரியம் ஒப்புதல் தந்த பின் இதில் தீர்வு எட்டப்படும் என்றுதெரிகிறது.

அதே நேரத்தில் எங்கள் நிலையில் மாற்றம் இல்லை என வி.எச்.பியின் சில தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+