பெண் போலீஸை டீஸ் செய்த வாலிபருக்கு தர்ம அடி
சென்னை:
பெண் போலீஸை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று கேலி செய்த வாலிபரை பொதுமக்கள் உதவியுடன்பிடித்து போலீஸில் ஒப்படைத்தார் அந்த பெண் போலீஸ்.
தாம்பரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் ஜானகி. இவர்குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை பணி முடிந்ததும், தாம்பரம் பஸ் நிலையத்திற்கு பஸ்ஏறுவதற்காக வந்துள்ளார். அப்போது அவர் யூனிபார்மில் இல்லை.
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் வாலிபர் ஜானகி அருகில் வந்து ஒரு ரவுண்ட் அடித்துலுக் விட்டார். பிறகு ஏதோ கமெண்ட் அடித்துள்ளார். இந்த நிலையில் ஜானகி செல்ல வேண்டிய பஸ் வந்துவிட்டது. இதையடுத்து ஜானகி பஸ்சில் ஏறினார்.
பைக் வாலிபர் விடவில்லை. ஜானகி ஏறிய பஸ்சை பின் தொடர்ந்து சென்றார். பஸ் குரோம்பேட்டையில் நின்றது.பஸ்சிலிருந்து இறங்கினார் ஜானகி. பைக் வாலிபரும் ஜானகி அருகே வந்து சில்மிஷம் செய்தார்.
உடனே ஜானகி, பைக் வாலிபரின் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு குரல் எழுப்பினார். இதைப் பார்த்தஅங்கிருந்த பொதுமக்கள் ஜானகிக்கு உதவியாக ஓடி வந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து அவனைநையப்புடைத்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications