பிரிட்டிஷ் போர் பயிற்சி விமானங்கள் வாங்குகிறது இந்தியா
லண்டன்:
பிரிட்டனிடம் இருந்து 66 ஹாக் ரக போர் பயிற்சி விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி எனம் பாதுகாப்புத்துறை தொடர்பான பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி:
இந்த போர் விமானங்களை பி.ஏ.இ. சிஸ்டம் என்ற நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது.
இந்த 66 போர் விமானங்களின் மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாகும். வரும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்தபோதே இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக இருந்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தாலும் கூடஇந்த விமானங்களை இந்தியாவுக்குத் தர இங்கிலாந்து முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா விமானப் படை பைலட்களுக்கு பயிற்றி அளிக்கவும் பிரிட்டன் முன் வந்துள்ளது. எம்பையர் டெஸ்ட்பெசிலிட்டி என்ற பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். முன்பு இந்தோனேஷியாவுக்குவழங்கப்பட்டிருந்த ஹாக் பயிற்சி விமானங்கள் இப்போது பிரிட்டனிடம் திரும்பி வந்துவிட்டன. இந்தவிமானங்களை மேம்படுத்தி இந்தியாவுக்குத் தரவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications