மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் திறக்கிறார் கருணாநிதி
சென்னை:
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான திமுக தலைவர் கருணாநிதி தனது தொகுதி மக்களின் குறைகளைக்கேட்பதற்காக அந்தப் பகுதியில் ஒரு அலுவலத்தைத் திறக்கிறார். வரும் 7ம் தேதி இந்த எம்.எல்.ஏ. அலுவலகம்திறக்கப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கருணாநிதி. தமிழகத்தில் உள்ள மிகச் சிறியதொகுதிகளில் ஒன்று சேப்பாக்கம் தொகுதி. இங்கு வெற்றி பெற்ற கருணாநிதி இதுவரை ஒரு முறை கூட சட்டசபைக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் அறைக்குச் சென்றுதான் எம்.எல்.ஏ. பதவியை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் கருணாநிதி மீது பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. சேப்பாக்கம் தொகுதி மக்களை கருணாநிதிமதிக்கவில்லை, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, தொகுதி மக்களை ஏமாற்றும் விதத்தில்சட்டசபைக்கு வருவதையே புறக்கணிக்கிறார். இதுதான் அவர் தொகுதி மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையாஎன்று அந்தத் தொகுதியில் பிற கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து 3 முறை ஒரு எம்.எல்.ஏ சட்டசபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாவிட்டால் (குறைந்தபட்சம்கையெழுத்துக் கூட போடாவிட்டால்) அவரது பதவி பறிபோய்விடும்.
எனவே கருணாநிதி வரும் கூட்டத் தொடரிலாவது கலந்து கொண்டாக வேண்டும். அட்லீஸ்ட் சட்டசபைக்கு வந்துஎம்.எல்.ஏக்கள் ரிஜிஸ்டரில் கையெழுத்தாவது போட வேண்டும்.
இந் நிலையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே எம்.எல்.ஏ அலுவலகத்தை கருணாநிதி திறந்துவைக்க இருக்கிறார். தொகுதி மக்களின் குறைகள், மனுக்கள் ஆகியவற்றைப் பெற இந்த அலுவலகம்பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. தேர்தல் முடிந்து பல மாதங்கள் கழிந்த நிலையில் தொகுதி அலுவலகம்திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அலுவலகத் திறப்புக்கான ஏற்பாடுகளை சேப்பாக்கம் திமுக செயலாளர் சுரேஷ் குமார் செய்து வருகிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications