மாணவர்கள் மோதல்: துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சட்டக்கல்லூரி மாணவர் கைது
சேலம்:
கோஷ்டி மோதலில் சக மாணவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சேலம் சட்டக்கல்லூரி மாணவரை போலீசார்கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தை சேர்ந்த வீரபத்ரனின் மகன் மாரிதுரை. இவர் சேலத்தில் உள்ள தனியார்சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
மாரிதுரையும், அவருடன் படிக்கும் மாணவர்களும் சேலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு மது அருந்தசென்றுள்ளனர். அங்கு மது குடித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால்,தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சிவராமகிருஷ்ணன் என்ற மாணவரை சுட்டு விடுவேன் எனமாரிதுரை மிரட்டியிருக்கிறார்.
பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. வழக்கம் போல் மீண்டும்துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்து போன சிவராமகிருஷ்ணன் கன்னங்குறிச்சிபோலீசாரிடம் இது குறித்து புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் உடனடியாக மாரிதுரை தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கு சென்று அவரைக் கைது செய்தனர்.அவர் சட்டைப் பைக்குள் வைத்திருந்த துப்பாக்கி மட்டும், 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாரிதுரை மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications