சோனியா ஆதரவுடன் எம்.பியாகும் வாசன்
சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடனேயே அவர்எம்.பியாகிவிட முடியும். ஆனாலும் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆதரவைக் கோரிப் பெற்றுள்ளார்.
அவருக்கு ஆதரவு தருவது குறித்து இடது சாரிக் கட்சிகள் இன்னும் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்திலிருந்து ஓய்வு பெறும் 6 ராஜ்யசபா எம்.பிக்களுக்குப் பதிலாக புதிதாக 6 பேரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் அதிமுக 4 இடங்களில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. திமுக ஒரு இடத்தில் வெற்றி பெற முடியும். மீதமுள்ள ஒரு இடத்தில்தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம்.
தமாகாவுக்கு சட்டசபையில் தற்போது 23 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் 34 எம்.எல்.ஏக்களின்ஆதரவு தேவை. எனவே வெற்றிக்குத் தேவைப்படும் ஓட்டுக்களை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்கட்சியிடமிருந்து பெற தமாகா முடிவு செய்துள்ளது.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் ஆதரவுஇல்லாமலும் கூட தமாகாவால் வெல்ல முடியும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இருப்பினும்கடைசி நேரத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு விட்டால் என்ற பயம் காரணமாகவே காங்கிரஸ் ஆதரவையும் தமாகா நாடுகிறது.
மேலும் காங்கிரஸை தான் புறக்கணிப்பதாக எந்த விதத்திலும் தவறான தகவல் பரவி விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் வாசன்.பெரும் கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் தன்னைப் பற்றி சோனியாவிடம் என்ன மாதிரியான தகவல்களைக் கூறிவருகின்றனர் என்பதும் அவருக்குத் தெரியவில்லை.
இந் நிலையில் காங்கிரஸ் ஆதரவு தேவையில்லாதபோதே கூட அந்தக் கட்சியின் ஆதரவைக் கேட்டுப் பெறுவது சோனியாவுடனானஉறவை பலப்படுத்தும் என வாசன் நினைக்கிறார். இதற்காக கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முற்றுகையிட்டுள்ள வாசன் நேற்றுமீண்டும் சோனியாவைச் சந்தித்தார்.
இதையடுத்து அவருக்கு ஆதரவு தர சோனியா முன் வந்துள்ளார். காங்கிரஸ் கடசியின் தமிழக பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா இதைஇன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதே போல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்று தெரிகிறது. அவர்களின் ஆதரவும் வாசனுக்கு நிச்சயம்கிடைத்துவிடும். இதனால் அவர் எம்.பியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications