அம்மாவுக்காக ஒரு பக்தன் பகீர் "காணிக்கை"
சிதம்பரம்:
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஒரு அதிமுக தொண்டர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதையடுத்துதனது நாக்கை வெட்டிக் கொண்டார்.
இந்தப் பயங்கரமான "பக்தி"ச் சம்பவம் சீர்காழியில் நடந்துள்ளது. சீர்காழியைச் சேர்ந்தவர் ராஜா. தீவிர அதிமுகதொண்டர், அதுமட்டுமல்லாது ஜெயலலிதா என்றால் ராஜாவுக்கு உயிர். அவருக்காக எதையும் செய்யும் மன நிலைகொண்டவர். சீர்காழியில் சாதாரண டீக்கடை வைத்துள்ளார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனால் திருப்பதி வந்து மொட்டை போடுவதாக அவர் வேண்டியிருந்தார்.அதுமட்டுமல்லாது இன்னொரு பகீர் வேண்டுதலையும் வைத்திருந்தார்.
கடந்த 2ம் தேதி ஜெயலலிதா பதவியேற்றதைக் காண 1ம் தேதியே சென்னை வந்தார் ராஜா. ஜெயலலிதாபதவியேற்பு நிகழ்ச்சியை பார்த்த அவர் மன திருப்தியுடன் திருப்பதி சென்றார்.
அங்கு முதலில் மொட்டை போட்டார். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது நாக்கை வெட்டினார்.பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அதை உண்டியலில் போட்டார்.
இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் பயந்து போய் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் ராஜா, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முழு நாக்கையும் வெட்ட முயன்றுள்ளார்.
ஆனால் கடைசி நேரத்தில் அதை கைவிட்டார். அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள் சுதாரித்துக் கொண்டு ராஜாவைமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜாவால் இனி பேச முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். சிகிச்சைக்குப் பின் ஊர் திரும்பினார் ராஜா. அவரை சிதம்பரம் எம்.எல்.ஏ உள்ளிட்ட அதிமுகவினர்நேரில் சென்று பார்த்தனர். ஒரு பேப்பரில், தான் ஏன் நாக்கை வெட்டினேன் என்பதற்கான காரணத்தை எழுதி வைத்துள்ளார் ராஜா.
அதில் அம்மாவுக்காக நான் எதையும் செய்வேன். அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு முடி காணிக்கையுடன்,நாக்கையும் காணிக்கை செய்வதாக வேண்டியிருந்தேன். எனது கோரிக்கை நிறைவேறியது. எனவே நானும் எனது காணிக்கையை நிறைவேற்றி விட்டேன் என்று எழுதியுள்ளார்.
இந்த "பக்தன்" காணிக்கையை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications