அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்
அயோத்தி:
அயோத்தியில் கரசேவர்கள் வருவதை தடுக்கு வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வி.எச்.பி.யினரின்முகாம்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
அயோத்தியில் திட்டமிட்டபடி மார்ச் 15ம் தேதி ராமர் கோவில் கட்டுவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கூறிவருகிறது.
இதனால் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதியிலிருந்தும் கரசேவர்கள் அயோத்தி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் கரசேவர்கள் அயோத்தி வராதவண்ணம் தடுக்குமாறு அயோத்தியில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் தங்கியிருக்கும் கரசேவர்களின் கூடாரங்கள் போலீசாரால்முற்றுகையிடப்பட்டுள்ளன.
கரசேவக்புரம், ராம்சேவக்புரம் ஆகிய 2 இடங்களிலும் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துஉள்ளது. இங்குள்ள கரசேவகர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களுக்கு யாரும் செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தவேண்டும் என்று பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அயோத்திக்கு செல்லும் எல்லா பாதைகளிலும் ரோந்து வாகனங்களில் போலீசார் கண்காணித்துவருகின்றனர். அயோத்திக்கு செல்லும் சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கரசேவகர்கள்அயோத்திக்குள் நுழையாமல் தடுக்கும் வண்ணம் பாதுகாப்புப்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.குப்தா கூறுகையில், கரசேவகர்கள் அயோத்தியில் நுழையாதவாறுதடுப்பதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து புறப்படும்கரசேவகர்களை அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications