பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்: விட்டுக் கொடுத்த அதிமுக
சென்னை:
வெள்ளிக்கிழமை முழுவதும் அமைதியாக நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டம் திமுக உறுப்பினரின் திடீர்கோஷத்தால் புயலைக் கிளப்பியது. இதனால் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உருவானது.
என்றுமில்லாத அதிசயமாக சென்னை மாநகராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை மிகவும் அமைதியாகநடந்தது.
கவுன்சிலர்கள் அனைவருமே ஆளுங்கட்சியினர் போல யாரையும், எதையும் குறை கூறாமல் பாராட்டு மழையாகபொழிந்து தள்ளினர்.
காலை சபை கூடியதுமே பட்ஜெட் குறித்த விவாதம் நடந்தது. அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிஉறுப்பினர்களுமே பட்ஜெட்டைப் பாராட்டிப் பேசினர். மேயர் ஸ்டாலினைக் குறை கூறுவதையே வழக்கமாககொண்டிருக்கும் அதிமுக கவுன்சிலர்கள், ஸ்டாலின் குறித்து எதுவுமே கூறாதது ஆச்சரியமாக இருந்தது.
இந்த ஆச்சரியத்தின் உச்சகட்டமாக மேயர் ஸ்டாலின் 11.25 மணியளவில் மேயர் அறைக்குத் திரும்பவேண்டியிருந்தது. இதையடுத்து அருகில் அமர்ந்திருந்த துணை மேயர் கராத்தே தியாகராஜனைக் கூப்பிட்டுசபையை நடத்துமாறு கூறி சென்றார் ஸ்டாலின்.
இதை எதிர்பார்க்காத கராத்தேவும், சுதாரித்துக் கொண்டு ஸ்டாலின் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார்.அப்புறம் என்ன, அதிமுக உறுப்பினர்கள் உற்சாகமாக கூக்குரலிட்டனர். இதை திமுக கவுன்சிலர்கள் புன்னகையுடன்பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிற்பகல் 1 மணி வரை சபை அமைதியாக நடந்தது. திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களின் கோரிக்கைகள்பலவற்றுக்கு கராத்தே தியாகராஜன் ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் ஒரு மணியளவில் மேயர் ஸ்டாலின் அவைக்குத் திரும்பினார். இதையடுத்து அவரே தொடர்ந்துசபையை நடத்தினார். மதிய உணவு இடைவேளைக்காக சபையை ஒத்தி வைக்கப் போகும் நேரத்தில் திமுகஉறுப்பினர் கிரிராஜன் எழுந்து, இந்த சபையை நடத்த ஸ்டாலினைத் தவிர வேறு எவருக்கும் (இதை அவர்ஒருமையில் கூறினார்) உரிமையில்லை என்று கத்தினார்.
இதைக் கேட்ட அதிமுக மற்றும் தமாகா கவுன்சிலர்கள் பொங்கி எழுந்தனர். கிரிராஜன் உபயோகித்த வார்த்தைகளைசபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாகஅவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சபைக் கூட்டத்தை மேயர் ஸ்டாலின் ஒத்திவைத்தார்.
பின்னர் உணவு இடைவேளைக்குப்பிறகு சபை மீண்டும் கூடியபோது அதிமுக கவுன்சிலர்கள் மீண்டும்கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், உறுப்பினர் கிரிராஜனுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும்,திமுக உறுப்பினர்கள் இவ்வாறு செயல்பட வாய்ப்பு உருவாகி விட்டதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அறிவித்தார்.
இதை சிறிதும் எதிர்பார்க்காத அதிமுகவினர் உடனடியாக அமைதியாயினர். மேலும் ஒருவரை ஒருவர்ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டனர்.
வழக்கமாக மாநகராட்சிக் கூட்டம் நடக்கும்போது அதிமுகவினர் கராத்தே தியாகராஜன் தலைமையில் பெரும்களேபரம் செய்வது வழக்கம். அவையை நடத்த முடியாமல் ஸ்டாலின் திண்டாடுவார்.
ஆனால், ஜெயலலிதா இப்போது முதல்வாரனதில் இருந்து விட்டுக் கொடுத்தும் போகும் மனநிலைக்குவந்துள்ளதாகத் தெரிகிறது. ஸ்டாலின், அன்பழகனை தனது பதவியேற்புக்கு அழைத்தது, அங்கு அவர்களைப்பார்த்து வணங்கியது, அன்பழகனை பின் வரிசையில் அமரச் செய்ததற்காக மன்னிப்பு கேட்டது எனஜெயலலிதாவின் ஸ்டைலில் பெரும் மாற்றங்கள்.
அதே போல ஸ்டாலினும் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று பதவியேற்பில் கலந்து கொண்டார். பின் வரிசையில்உட்கார வைக்கப்பட்டாலும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. மாநகராட்சிக் கூட்டம் தொடங்கியபோதேதேவைப்பட்டால் முதல்வரைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அறிவித்தார்.
ஒரு வழியாய் நாகரீக அரசியல் தமிழகத்துக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறதோ?












Click it and Unblock the Notifications